திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் முதல் நிலை பேரூராட்சி செயல் பட்டு வருகிறது.
மாதமாதம் வசூலுக்கு செல்லும் நிருபர்களும் அதிகளவில் அலுவலகத்திற்கு வந்து செல்வதாலும் வார இதழ் மாத இதழ் என பல்வேறு பத்திரிகைகளின் பெயர்களை கூறிக்கொண்டு அலுவலகத்திற்கு நேரில் சென்று நன்கொடை வசூலித்து வருகின்றனர் என தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பேரூராட்சி நிர்வாகம் வித்தியாசமான முறையில் அறிவிப்பு நோட்டீஸ் ஒன்றை அலுவலகத்தில் ஒட்டி உள்ளது.
அதில் பத்திரிக்கை நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் என்ற தலைப்பில் பத்திரிகைகளுக்கும் நன்கொடை அளிக்க இப்பேரூராட்சியில் வழிவகை இல்லை என்பதால்
பத்திரிக்கை நண்பர்கள் தொகை கேட்டு இப்பேரூராட்சியை அணுக வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.இப்படிக்கு உப்பிலியபுரம் பேரூராட்சி நிர்வாகம் என ஒட்டப்பட்டுள்ளது…..
செய்தியாளர்; ரூபன்ராஜ்