மதுரை மாவட்டம் பறவை இளங்கோ தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ் இவரது மகன் குருதேவ் (வயது 22) போட்டோகிராபர்.மதுரையில் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார்.இவருடைய நண்பர் மூலம் ஹைதராபாத்தை சேர்ந்த இரண்டு வாலிபர்கள் குரு தேவ உடன் அறிமுகம் ஆகிறார்கள்.அதில் ஒருவர் தன்னுடைய தங்கைக்கு திருமணம் நடைபெற்று விட்டதாகவும்,இதைத்தொடர்ந்து திருச்சி, தஞ்சை குடந்தை பகுதிகளில் புதுமணத் தம்பதிகளை வைத்து போட்டோ சூட் எடுக்க வேண்டும் என்று கூறி குருதேவ்வை அழைத்துக் கொண்டு திருச்சிக்கு மூன்று பேரும் வந்துள்ளனர், பிறகு திருச்சி திருவானைக்காவல்யை அடுத்த செக்போஸ்ட் பகுதியில் உள்ள ஒரு ஒட்டலில் அறை எடுத்து மூன்று பேரும் தங்கினர். பிறகு மாலை நேரத்தில் திருவரங்கம், திருவானைக்காவல் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு இரவு 3 பேரும் அறைக்கு திரும்பினர்.ஹைதராபாத் சேர்ந்த இரண்டு வாலிபர்களும் இரவு சீக்கிரமாக தூங்கி விட்டு காலையில் புதுமண தம்பதியினர் வந்து விடுவார்கள் அவர்களை வைத்து போட்டோ சூட் பல்வேறு பகுதிகளில் எடுத்து விடலாம் என்று கூறி இரவு சீக்கிரமாக தூங்கி விடலாம் என்று கூறி அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.அப்பொழுது நள்ளிரவு திடீரென்று ஹைதராபாத்தை சேர்ந்த இரண்டு மர்ம ஆசாமிகளும் திடீரென்று கண்விழித்து அறையில் இருந்த 2 லட்சம் மதிப்புள்ள கேமரா மற்றும் கேமரா தொடர்பான பொருட்களை திருடிக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.காலையில் எழுந்து பார்த்த குருதேவ் தன்னுடைய கேமரா காணாமல் போனதையும்,அறையில் தங்கியிருந்த ஹைதராபாத் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதை தொடர்ந்து குருதேவ் நடந்த சம்பவத்தை திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருட்டு போன கேமரா மற்றும் பொருட்களின் மதிப்பு ரூபாய் 3 லட்சம் ஆகும். பிறகு முதல் கட்டமாக ஒட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் சோதனை செய்து பார்த்த பொழுது நள்ளிரவு இரண்டு மர்ம ஆசாமிகளும் கேமரா உள்ளிட்ட பொருட்களை திருடிக் கொண்டு அறையில் இருந்து வெளியே வந்து சாலையில் நின்ற காரில் புறப்பட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மர்ம ஆசாமிகள் சென்ற கார் எண்ணை வைத்து அந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது ஒட்டலில் இருந்து இரண்டு மாதம் சாமிகளே நாமக்கல் அழைத்துச் சென்று இறக்கி விட்டதாகவும், அதன் பிறகு அந்த மர்ம ஆசாமிகள் இரண்டு பேரும் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை என்று டிரைவர் கூறினார்.இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.