செஃப் தாமு
இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 72.
கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் (அப்பல்லோ) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
சமையல் துறையில் ஹோட்டல் மேலாண்மையில் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்ற முதல் இந்தியச் சமையல் கலைஞர் இவராவார். 2010-ஆம் ஆண்டில் தொடர்ந்து 24 மணி நேரத்திற்கும் மேலாக சமைத்து, 617 வகையான உணவுகளைத் தயாரித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
சமையல் கலைத் துறையில் இவரது அசாத்திய பங்களிப்பைப் பாராட்டி, இந்திய அரசு 2025-ஆம் ஆண்டில் இவருக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
ஜெயா டிவி, விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ போன்ற சமையல் நிகழ்ச்சிகளின் நடுவராகப் பங்கேற்று, தமிழ்நாடு மக்களின் அன்பான ‘தாமு அப்பா’வாகத் திகழ்ந்தார்.
அவரது மறைவுக்குத் திரைத்துறையினரும், ரசிகர்களும், சமையல் உலகினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்…
செய்தியாளர் ; ரூபன்ராஜ்

