கனமழை எச்சரிக்கை அறிவிப்பை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தலைமையில் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய வானிலை மையம், 26.11.2024 முதல் 28.11.2024 வரை நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே பொதுமக்கள் மழை சேதம் தொடர்பாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் கட்டணமில்லா தொலைபேசி பேரிடர் எண். 04365-1077 மற்றும் மாவட்ட ஆட்சியரின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-233-4233 இயங்கி வருகிறது.
இக்கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.எனவே பொது மக்கள் இயற்கை பேரிடர் தொடர்பான கோரிக்கைகள் இருப்பின் உடனடியாக மேற்படி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிருவாகம் தயார் நிலையில் உள்ளது.
எனவே, பொதுமக்கள் மாவட்ட நிருவாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.மேலும், வடகிழக்கு பருவமழை அதிகளவு பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் நலன் கருதி 26.11.2024 ஒரு நாள் மட்டும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாவும் ஆட்சியர் செய்தி தெரிவித்துள்ளார்
செய்தியாளர் : சே சந்தியா