Saturday, June 13, 2026
No menu items!
HomeUncategorizedதவெக அரசுக்கு எதிராக அதிமுக அறிவித்துள்ள முதல் போராட்டம். சிவி சண்முகத்துக்கு செக் வைத்தாரா எடப்பாடி?

தவெக அரசுக்கு எதிராக அதிமுக அறிவித்துள்ள முதல் போராட்டம். சிவி சண்முகத்துக்கு செக் வைத்தாரா எடப்பாடி?

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு மற்றும் பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டித்து அதிமுகவின் சார்பில் வரும் ஜூன் 19ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தவெக அரசுக்கு எதிராக அதிமுக அறிவித்துள்ள இந்த முதல் போராட்டம் எங்கே நடைபெறுகிறது என்றால் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் என்றாலே அதிமுகவில் நினைவுக்கு வரும் முதல் பெயர் சிவி சண்முகம்.

தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் ஒருவர் சி.வி சண்முகம்

தவெக அரசுக்கு எதிராக அதிமுக அறிவித்துள்ள இந்த முதல் போராட்டமே விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியின் உத்தரவை ஏற்று இதில் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் மாவட்ட செயலாளருமான சிவி சண்முகம் பங்கேற்பாரா? அல்லது பங்கேற்காமல் புறக்கணிப்பாரா?

அப்படி பங்கேற்றாலும் விஜயை கண்டித்து அவருக்கு எதிராக விமர்சனங்களை முன் வைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version