கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகர் பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்கத்தின் சார்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் மூ.வீரபாண்டியன் தலைமையில் கர்நாடக அரசு குருவை சாகுபடிக்கு உடனடியாக காவிரி நீரை திறந்து விட வலியுறுத்தியும் மேகதாது அணையை எக்காரணம் கொண்டும் கட்டக் கூடாது என்பதை வலியுறுத்தியும் ஆயிரக்கணக்கான கட்சியினர், தொழிற்சங்கத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்தப் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார் கட்சியின் மூத்த தோழர் லகுமைய்யா மற்றும் கட்சியின் முன்னணித் தலைவர்கள் பங்கேற்றனர். சிபிஐ கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன் அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் கூறும்போது கர்நாடகாவில் ஆளுகின்ற காங்கிரஸ் அரசனது தமிழக விவசாயிகளை பாதிக்கின்ற பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது குருவை சாகுபடிக்காக தமிழக விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது,

உடனடியாக கர்நாடக அரசு தமிழக விவசாயிகள் பாதிக்காத வகையில் காவிரி நீரை திறந்து விடுவதோடு மட்டுமல்லாமல் மேகதாது அணை கட்டுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்பதை சிபிஐ கட்சியின் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் எங்களுடைய கோரிக்கைகளை கர்நாடக அரசு செவி சாய்க்கவில்லை எனில் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய மக்கள் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துக் கொண்டார், தமிழக வெற்றிக்கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருகிறீர்களே அமைச்சரவையில் இடம்பெறுவீர்களாஎன செய்தியாளர்கள் கேட்டதற்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கூட அமைச்சர்கள் வர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார் மேலும் அவர் கூறுகையில் நாங்கள் இடதுசாரிகள் ஒருங்கிணைப்பு குழுவை
அமைத்திருக்கிறோம் அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து மக்களுக்கான போராட்டங்களில் இணைந்து செயல்படுவது என்று முடிவு செய்து இருக்கிறோம் என்கின்ற தகவலையும் தெரிவித்துக் கொண்டார்.
செய்தியாளர்
ஜி.பி.மார்க்ஸ்
புகைப்படம்
ஆர்.கிருபானந்தம்
