HomeUncategorizedதாய்மாமன் சீர் வேணாம் முதல்வரே….! மூடிய கடையை திறக்க வேணாம் முதல்வரே… !! டாஸ்மாக் மீண்டும்...

தாய்மாமன் சீர் வேணாம் முதல்வரே….! மூடிய கடையை திறக்க வேணாம் முதல்வரே… !! டாஸ்மாக் மீண்டும் செயல்பட எதிர்ப்பு.

அரியலூர் மாவட்டம்
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வாரியங்காவல் பகுதியில் கடந்த காலங்களில் செயல்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்த நிலையில் கடந்த 1ம் தேதி 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் சமூக தீர்வு எட்டப்பட்டு கடந்த 13 நாட்களாக டாஸ்மாக் கடை திறக்கவில்லை. மூடிய வாரியங்காவல் டாஸ்மாக் கடையை மீண்டும் திறப்பதற்கு அரசு முயற்சி செய்ததாக கூறப்பட்ட தகவலையடுத்து பொதுமக்கள் வாகனங்கள் மூலம் பிரச்சனைக்குரிய டாஸ்மாக் கடை அருகே ஒன்று திரண்டனர்.

வாரியங்காவல் பகுதியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க கூடாது என்பதை வலியுறுத்தி அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக நூதன முறையில் பெண்கள் ஒப்பாரி வைத்து எங்களுக்கு தாய்மாமன் சீரும் வேண்டாம்,

உதவித்தொகையும் வேண்டாம், பெண்களின் தாலி அறுப்பதற்கு காரணம் டாஸ்மாக் கடைதான் என்பதை பாட்டாக பாடி ஒருவருக்கொருவர் மார்பில் அடித்துக் கொண்டு ஒப்பாரி பாடலாக பாடி கவனத்தை ஈர்த்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சம்மந்தப்பட்ட இடத்தில் மீண்டும் கடை திறக்கப்படாது என போலீசார் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனர். திடீர் பரபரப்புக்குள்ளான வாரியங்காவல் பகுதி சகஜநிலைக்கு திரும்பியது.

எம்.எஸ்.மதுக்குமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here