ஜோஸப் கண் மருத்துவ மனையும், ரோட்டரி மாவட்டம் 3000 மற்றும் ஹோலி கிராஸ் கல்லூரி சமூக பணி துறையும் , இணைந்து பல்வேறு, துறைகளில் சாதித்த பெண்களுக்கு ” சாதனைப் பெண்கள் விருது” வழங்கும் விழா சிறப்பு விருந்தினர் ரொட்டேரியன் ஜமீர் பாட்ஷா அவரது மனைவி சகிலா ஜமீர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். சிறப்பு அழைப்பாளரான 3000 மீடியா பப்ளிசிட்டி ஆபிஸர் ரொட்டேரியன் ஏ.கே.எஸ் .சீனிவாசன் அவர்களும் கலந்து கொண்டு, சாதனை பெண்களுக்கு விருதுகளை வழங்கினர். தொடர்ந்து ஜோசப் கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரதீபா மற்றும் ஹோலி கிராஸ் கல்லூரி முதல்வர் இசபெல்லா ராஜகுமாரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் . இவ்விழாவில் 35 பெண்களுக்கு விருது வழங்கி கௌரவித்தனர் . தொடர்ந்து ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுபா பிரபு மற்றும் ஹோலி கிராஸ் கல்லூரியில் சமூக நலத்துறை தலைவி அனிதா அவர்கள் முயற்சி சிறப்பாக ஏற்பாடு செய்து நிகழ்ச்சியை நிறைவு செய்தனர் . நிகழ்ச்சியில் ஜமீர் பாட்ஷா உரையாற்றும் போது தனது கடந்த கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.