தமிழ்நாடு யாதவ மகாசபை திருச்சி மாவட்ட அலுவலகம்,மற்றும் திருமண தகவல் மையம் திறப்பு விழா திருச்சி சத்திரம் பஸ் நிலையம் கரூர் மெயின் ரோடு என்.எஸ்.காம்ப்ளக்ஸ் மூன்றாம் களத்தில் இன்று நடந்தது.தமிழ்நாடு யாதவ மகாசபை திருச்சி மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார்.மாநிலச் செயலாளர் தமிழ்ச்செல்வம் அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார்.மாநிலச் செயலாளர் ஸ்ரீதர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.கூட்டத்தில் தமிழ்நாடு யாதவ மகாசபை திருச்சி மாவட்ட, ஒன்றிய, மாநகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.இதைத்தொடர்ந்து தமிழ்நாடு யாதவ மகாசபை நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்,திருச்சி மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வீர நரக முத்துக்கோனுக்கு சிலை அமைத்தல் என மாவட்ட யாதவ மகா சபை சார்பில் முடிவு செய்வது,இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வீரன்அழகு முத்துக்கோன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்ப்பது என தமிழக அரசை கேட்டுக் கொள்வது,கால்நடை மற்றும் ஆடு வளர்ப்போர்களுக்கு நலவாரியம் அமைக்க தமிழக அரசை வற்புறுத்தி கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.