நாகப்பட்டினம் மாவட்டம் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக 202425 ஆம் ஆண்டு ஆண்டிற்கான கலைத் திருவிழா போட்டிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கநிலை தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 12 வகுப்பு பயிலும் மாநில மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு 08.03.2025 அன்று காலை 10 மணியளவில் நாகப்பட்டினம் இஜிஎஸ் பிள்ளை கல்வி நிறுவன கூட்ட அரங்கில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் திரு.ப.ஆகாஷ் இ.ஆ.ப, நாகப்பட்டினம் மாவட்ட வருவாய் அலுவலர், நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி எம்.கே.சி.சுபாஷினி ஆகியோர் வாழ்த்துக்களுடன் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கி.திவ்யபிரபா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள்.

மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) திரு.எம்.ரவிச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க நிலை) திரு.எம் துரைமுருகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாகப்பட்டினம் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் திருமதி தா.சாந்தி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்.
இப்பரிசளிப்பு விழாவில் 1 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 696 மாணவ மாணவியர்களுக்கும் மாநில அளவில் வெற்றி பெற்ற 16 மாணவ மாணவியர்களுக்கும் பாராட்டுக்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட அளவிலான வானவில் மன்ற போட்டிகளில் பங்கு பெற்ற 54 மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வெற்றி பெற்ற 12 மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
இப்பரிசளிப்பு விழாவில் வட்டார கல்வி அலுவலர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், அலுவலகப் பணியாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நாகப்பட்டினம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி சே.சண்முகக்கனி சுரேந்தர் நன்றி கூறினார்.
ஜி.பி.மார்க்ஸ்
செய்தியாளர்