Tuesday, March 11, 2025
No menu items!
HomeUncategorizedகிருஷ்ணகிரி கம்பன் கழகத்தின் சார்பாக மகளிர் தின விழா கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி கம்பன் கழகத்தின் சார்பாக மகளிர் தின விழா கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெற்றிவேல் மஹாலில் கம்பன் கழகத்தின் சார்பாக மகளிர் விழா கொண்டாடப்பட்டது
அது சமயம் இவ்விழாவில் கிருஷ்ணகிரி கம்பன் கழக மகளிர் அணி தலைவி கோ.சாந்தி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அதைத்தொடர்ந்து கம்பன் கழகத் தலைவர் இ.ரவிந்தர் அவர்கள் இவ்விழாவிற்கு தலைமை ஏற்றினார்.
மற்றும் சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி மாவட்ட சட்ட பணிகள் ஆணையக் குழு மாண்பமை சார்பு நீதிபதி செயலாளர் திருமதி.ஜெயந்தி அவர்கள் சிறப்பாக சேவை செய்தவர்களுக்கு கேடயமும் சான்றிதழும் வழங்கி பேருரை ஆற்றி பாராட்டினார்.
கௌரவ விருந்தினர்களாக கிருஷ்ணகிரி வட்டாட்சியர் வளர்மதி அவர்கள் மற்றும் டாக்டர் உஷா பாலச்சந்தர் கலந்துகொண்டு மகளிர்களுக்கு வாழ்த்துரை கூறினார்கள்,
சிறப்பு பேச்சாளர்களாக மகளிர்மாண்பு என்ற தலைப்பில் தேசிய பயிற்சியாளர் பாலமுருகன் மற்றும் குடியாத்தம் கம்பன் கழகத்தின் இணைச் செயலாளர் தமிழ் திருமால் மற்றும் கிருஷ்ணகிரி கம்பன் கழக துணைத் தலைவர் அச்சுதன் ஆகியோர் மகளிர் பெருமைகளைப் பற்றி தனி உரை ஆற்றினார்கள்.


விழாவிற்கு திட்ட தலைவராக துணைத் தலைவி ஜெயலட்சுமி மற்றும் கம்பன் கழக செயலாளர் சா.முருகேசன் செயல்பட்டனர்.
மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளராக கம்பன் கழகத் துணைத் தலைவர் ஜெ. பாலாஜி அவர்கள் மற்றும் அவைத்தலைவர் அ பன்னீர்செல்வம் அவர்கள் செயலாளர் க.அருள் அவர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்ஜி.கே சீனிவாசன் அவர்கள் மற்றும் . கௌரவ மகளிர் அணி தலைவி குரு.மதுமொழி ஆனந்த் மற்றும் துணைத் தலைவர் தமிழ்நாடு நல்லாசிரியர் விருது பெற்ற
கி.விஜயகுமார் அவர்கள் மற்றும் துணைச் செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில்
400க்கும் மேற்பட்ட மகளிர்கள் கலந்து கொண்டனர் அதில் சிறப்பாக சேவை செய்தவர்களுக்கும் தங்கமகள் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டனர். மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டி வைத்து அதில் சிறப்பாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது. விழாவில் கம்பன் கழகப் பொருளாளர் ஸ்ரீரங்கன் மற்றும் கவி மன்ற தலைவர் சதீஷ் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
சிவபால நாட்டியாலாயா பள்ளி மாணவிகள் மற்றும் தேன்தமிழ் நாட்டியாலயா பள்ளி மாணவிகள் மற்றும்
ஸ்வர ராக பரதாலயா மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழா முடிவில் மகளிர் அணி செயலாளர் செ.சுமதி நன்றி உரை கூறினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் இலவசமாக கொடுக்கப்பட்டது.

மு.நந்தகுமார்
செய்தியாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version