Sunday, December 22, 2024
No menu items!
HomeUncategorizedஅதிராம்பட்டினம் மருத்துவமனை அருகில் நடந்து சென்றவர் திடீரென மயங்கி கீழே விழுந்து இறந்ததால் பரபரப்பு

அதிராம்பட்டினம் மருத்துவமனை அருகில் நடந்து சென்றவர் திடீரென மயங்கி கீழே விழுந்து இறந்ததால் பரபரப்பு

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை சாலையில் நேற்று காலை சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் விரைந்து சென்று அவரை அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று விசாரணை செய்ததில் அவர் அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கீழக்காடு பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவரது உடலை போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

விளம்பரம்:-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version