Tuesday, June 9, 2026
No menu items!
HomeUncategorizedதிருச்சி லாட்ஜில் தனியாக அறை எடுத்து தங்கி போதை ஊசி போட்டுக் கொண்டு உல்லாசமாக இருந்த...

திருச்சி லாட்ஜில் தனியாக அறை எடுத்து தங்கி போதை ஊசி போட்டுக் கொண்டு உல்லாசமாக இருந்த போது காதலி உயிரிழப்பு; காதலன் கைது..!

திருச்சி அரியமங்​கலம் உக்​கடை பகு​தி​யைச் சேர்ந்​தவர் சதாம் உசேன் (19). இவருக்​கு 17 வயது சிறுமி​யுடன் பழக்​கம் ஏற்​பட்​டுள்​ளது. இரு​வருக்கும் போதை ஊசி போடும் பழக்​கம் இருப்பதாக கூறப்​படு​கிறது.இந்​நிலை​யில், இவர்​கள் இரு​வரும் தம்பதி என தெரி​வித்து நேற்று முன்தினம் மத்​திய பேருந்து நிலை​யம் பகு​தி​யில் உள்ள தனி​யார் விடு​தியில் அறை எடுத்து.தங்​கி​யுள்ளனர் பின்​னர்,நேற்று மாலை அறை​யில் இருந்து பதற்​றத்​துடன் வெளியே வந்த சதாம் உசேன், தனது மனைவி கட்​டிலில் இருந்து கீழே விழுந்து மயங்​கி​விட்​டார் என தெரி​வித்​துள்​ளார்.இதையடுத்​து, அந்​தச் சிறுமியை திருச்சி அரசு மருத்​து​வ​மனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், சிறுமி உயிரிழந்​து​விட்​டதாக தெரி​வித்​தனர்.இது தொடர்பாக தகவலறிந்த கன்​டோன்​மென்ட் விடுதிக்குச் சென்று சிறுமியின் உடலை கைப்​பற்றினர். விடு​தியில் சோதனை நடத்​தி​ய​போது, போதை மாத்​திரைகள் கைப்​பற்​றப்​பட்​டன. போலீ​ஸார் வழக்​குப் பதிந்து, சதாம் உசேனிடம் விசாரித்து வரு​கின்​றனர்.போதை கலாச்சாரம் இன்னும் தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், இளைஞர்களிடையே பரவி உள்ளது.விரைவில் தவெக அரசு போதை பொருட்கள் விற்பவர்களை கைது செய்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிடில் இளைய தலைமுறை போதையின் பிடியில் சிக்கிவிடுவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version