Sunday, February 1, 2026
No menu items!
HomeUncategorizedதிருச்சியில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும்., துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தி.மு.க....

திருச்சியில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும்., துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தி.மு.க. தெற்கு மாவட்ட கழகம் சார்பாக ரத்த தான முகாம் நடைபெற்றது.

கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பாக நடை பெற்றது.

 DCM - 48 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர் கழக இளைஞரணி  செயலாளர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 

48 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
மேலும் இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பாக மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வரவேற்புரை மாநகரக் கழகச் செயலாளர் மண்டல குழு தலைவர் மு.மதிவாணன்,
தலைமை திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நடந்த,
மாபெரும் ரத்ததான முகாமை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு‌.வீரபாண்டியன் துவக்கி வைத்து உரையாற்றினார் .

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வன்னை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, மாநில அணி நிர்வாகி செந்தில்,
மாவட்டக் கழக நிர்வாகிகள் கோவிந்தராஜ், செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு, குணசேகரன், பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேருர் கழக நிர்வாகிகள், வட்டக் கழகச் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version