அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சி கிருஷ்ணமூர்த்தி சட்டம் பயின்றவர். தமிழ்நாடு அரசின் தேர்வாணையம் ( TNPSC ) மூலம் 2013 ஆண்டு கிராம நிர்வாக அலுவலராக ( VAO ) ஆக அரியலூர் மாவட்டதில் பணியில் சேர்ந்த பின்
TNPSC குரூப் 2 மூலம் 2015 ல் தலைமைச் செயலகம் சட்டத்துறையில் Assistant Section Officer ஆக பணியில் பொறுப்பேற்று கடந்த 2018 ம் ஆண்டில் சட்டத்துறையில் Section Officer ஆக பதவி உயர்வு பெற்றார்.

தற்பொழுது வீட்டு வசதி துறை அமைச்சரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வரும் நிலையில் தலைமைச் செயலகம் சட்டத் துறையின் அரசு சார்பு செயலாளராக பதவி உயர்வு ஆணையினை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. இதையடுத்து பதவி உயர்வுக்கான உத்தரவை சட்டத்துறை செயலாளர் எஸ்..ஜார்ஜ் அலெக்சாண்டரிடம் சி. கிருஷ்ணமூர்த்தி பெற்றுக்கொண்டார். அரியலூர் மாவட்டத்தின் குக்கிராமத்தில் இருந்து சென்றவர் படிப்பாலும், உழைப்பாலும் உயர் பதவி அடைந்த செய்தி அரியலூர் மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எம்.எஸ்.மதுக்குமார்.
