புதிய பாரத எழுத்தறிவு இயக்க தேர்வுகள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் டிசம்பர் 14 .2025 அன்று சிறப்பாக அனைத்து மையங்களிலும் நடைபெற்றது . 636 மையங்களில் சுமார் 15,283 கற்போர்கள் இத்தேர்வை எழுதினர் .முதன்மை கல்வி அலுவலர்,உதவித்திட்ட அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மேற்பார்வையாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் என அனைவரும் ஒரு நபருக்கு 10 மையங்கள் வீதம் தேர்வு மையங்களை பார்வையிட்டனர்.

தேர்வானது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. தேர்வுகள் முடிவடைந்த நிலையில் அன்றே வினாத்தாள்கள் அந்தந்த வட்டார வள மையங்களில் ஒப்படைக்கப்பட்டது. டிசம்பர் 15 முதல் வினாத்தாள்கள் திருத்தும் பணி அனைத்து ஒன்றியங்களிலும் நடைபெற்று வருகிறது.
ஜிபி.மார்க்ஸ்
செய்தியாளர்
