Wednesday, February 5, 2025
No menu items!
HomeUncategorizedகுழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுத்தலுக்கான பயிற்சி வகுப்பு

குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுத்தலுக்கான பயிற்சி வகுப்பு

கீழ்வேளூர் ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் சார்ந்த ஒன்றிய அளவிலான பயிற்சி DIET குருக்கத்தியில் நடைபெற்றது. இதில் நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள 33 பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். DIET முதல்வர் திரு.அன்புமுத்து பயிற்சியினை தொடங்கி வைத்தார் . விரிவுரையாளர் திரு. ரவிசங்கர் சிறப்புரையாற்றினார்.மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் இருந்து திருமதி. விஜயலட்சுமி மற்றும் கமலவேணி, மேற்பார்வையாளர் திருமதி த.அமுதா, முதுகலை பட்டதாரி ஆசிரியர் திரு.குமார் மற்றும் பட்டதாரி ஆசிரியர் திரு.நாகராஜன் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர். போக்சோ சட்டத்தின் முக்கியத்துவம் அதன் அம்சங்கள், குழந்தைகள் நல உரிமைகள், சிறார் நீதிச் சட்டம் , குழந்தைகள் நலன் சார்ந்த அமைப்புகள் உள்ளிட்டவை குறித்து சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியப் பயிற்றுநர் திரு.சாம்பசிவம் மற்றும் தன்னார்வலர் திருமதி.சரஸ்வதி பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

ஜிபி.மார்க்ஸ்
செய்தியாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version