கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஜனவரி 1 முதல் ஜனவரி 31 வரை ஒரு மாத காலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன, அந்த வகையில் ஜனவரி 30 அன்று ஓசூர் தர்கா, ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் அருகில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது, விழிப்புணர்வு வாகன பேரணியானது நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று இறுதியில் ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவு பெற்றது.
![](https://arasiyaltimes.com/wp-content/uploads/2025/01/IMG-20250130-WA0134-1024x464.jpg)
இந்நிகழ்வில் ஓசூர் வட்டார போக்குவரத்து துறை ஆய்வாளர் திரு.மணிமாறன், வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரி திரு.பிரபாகரன், போக்குவரத்து காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், ஓட்டுநர் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த பயிற்றுநர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
ஜிபி.மார்க்ஸ்
செய்தியாளர் ஓசூர்