Sunday, December 22, 2024
No menu items!
Homeதமிழகம்வெளியானது 10th பொதுத்தேர்வு முடிவுகள்-தமிழகத்தில் யார் முதலிடம்?

வெளியானது 10th பொதுத்தேர்வு முடிவுகள்-தமிழகத்தில் யார் முதலிடம்?

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் எட்டாம் தேதி வரை தேர்வு நடைபெற்றன. தமிழக முழுவதும் சுமார் 9 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வினை எழுதிய நிலையில், தேர்வு முடிவுகள் இன்று 10/05/2024 காலை 9:30 மணியளவில் வெளியானது.

தேர்வு முடிவுகளை மாணவர்கள்
www.tnresults.nic.in www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பார்க்கலாம்.

நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்தவர்கள் :

தமிழ் 8
ஆங்கிலம் 415
கணிதம் 20691

மொத்தமாக பத்தாம் வகுப்பு தேர்வில் 91.55% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்தாண்டு 91.39 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 91.55% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளை அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் மாணவர்களை விட 5.95% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 4,105 பள்ளிகள் 100% தேர்ச்சி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அளித்துள்ளன.
87.90% அரசு பள்ளிகள் பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி அளித்துள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகள் 91.77% 100 சதவீத தேர்ச்சி அளித்துள்ளது.

பள்ளிகள் வாரியான தேர்ச்சி விகிதம்: (100/100)

*அரசு பள்ளிகள் 87.90%

*அரசு உதவி பெறும் பள்ளிகள் 91.77%

*தனியார் பள்ளிகள் 97.43%

*இருபாலர் பள்ளிகள் 91.93%

*ஆண்கள் பள்ளிகள் 83.17%சதவீதம்

*பெண்கள் பள்ளிகள் 93.80%

எந்த மாவட்டம் முதலிடம் :

பத்தாம் வகுப்பு தேர்வில் அரியலூர் மாவட்டம் தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 97.31% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இரண்டாவதாக சிவகங்கை மாவட்டம் 97.02 சதவீதம்

மூன்றாவதாக இராமநாதபுரம் 96.36% நான்காவது

கன்னியாகுமரி 96.24 சதவீதம்

ஐந்தாவது திருச்சி 95.23 சதவீதம்

கடைசி இடத்தில் வேலூர் மாவட்டம் 82.07 சதவீதம்

அ.காவியன்
செய்தியாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version