அதிராம்பட்டினத்தில் தொடர் விபத்துகளை தடுக்கும் வண்ணம் கிரசண்ட் பிளட் டோனர்ஸ் CBD அமைப்பினர் அதிராம்பட்டினம் காவல்துறையோடு இணைந்து சேர்மன்வாடி அருகே வாகனத் தடுப்பு பேரிகாட் வைக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
நிகழ்வில் அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் முருகேசன், பயிற்சி உதவி ஆய்வாளர் நாகஅர்சூன்குமார்
பிரசண்ட் பிளட் டோனர்ஸ் மாவட்ட தலைவர் பேராசிரியர் செய்யது அகமது கபீர், நகரத் தலைவர் அப்துல் மாலிக், CBD பொறுப்பாளர்கள் மாலிக், நூர் முஹம்மது, ஆரிப் அஸ்லாம், முஸ்தாக் பக்ருதீன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தொடர்ந்து வாகன விபத்துக்கள் அதிகரிப்பதை தடுக்கும் வண்ணம் நகரின் பல்வேறு பகுதிகளில் பேரிகாட் அமைக்க சிபிடி அமைப்பினர் முயற்சித்து வருகின்றனர்.