சோழ பேரரசர்கள் இராஜராஜசோழன், ராஜேந்திரசோழன் ஆகியோருக்கு தமிழகத்தில் சிலை அமைக்கப்படும் என்ற பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் அறிவிப்பை வரவேற்று முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கடந்த 23 ம் தேதி அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில், மத்திய கலாச்சாரத் துறை சார்பில் ராஜேந்திர சோழனின் பிறந்த நட்சத்திர மான ஆடி திருவாதிரை விழா, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழாவில், சோழப்பேரரசர்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோருக்கு தமிழகத்தில் உருவச்சிலை அமைக்கப்படும் என்று பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை முக்குலத்துப்புலிகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறேன். தெற்கு ஆசியாவை கட்டி ஆண்டு, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக தஞ்சை பெரியகோவிலை நிர்மாணித்த பேரரசர் ராஜராஜசோழ்னின் சிலை பெரியகோவில் வளாகத்துக்குள் வைக்கப் படாமல் ஒதுக்குப்புறமாக மாநகராட்சி இடத்தில் வைக்கப் பட்டுள்ளது. முக்குலத்துப்புலிகள் கட்சியின் சார்பில் பலகட்ட போராட்டங்கள், பேரணிகள் நடத்தியும், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டும் அந்த சிலை கோவில் வளாகத்துக்குள் வைக்கப் படவில்லை. பாரதப் பிரதமரின் இந்த அறிவிப்பை ஒட்டியாவது பேரரசரின் சிலை பெரியகோவில் வளாகத்துக்குள் வைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்