தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் எஸ்.பி தனிப்பிரிவு காவலராக பணிபுரிபவர் பெருமகளூர் பகுதியை சார்ந்த ராமராஜன் என்பவர் அவரைப் பற்றி பல்வேறு புகார்கள் அப்பகுதியில் வலம் வர என்ன நடந்தது, ஏன் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அப்பகுதி மக்கள் சுமத்துகின்றனர் என அங்குள்ள சில முக்கிய பிரமுகர்களிடம் பேசினோம்.

காவல் நிலையத்தில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆய்வாளரை தாண்டி பிரச்சினையை எதிர்கொள்பவர் இவர்தானாம். அதே போல எந்த வழக்கு வந்தாலும் அதனை ஆய்வாளரும், உதவி ஆய்வாளரும் எப்படி டீல் செய்ய வேண்டும் என்கிற ஐடியாவையும் இவர்தான் கொடுத்து வருகிறாராம்.
இவருக்கு வேண்டியவர்களோ அல்லது ஸ்வீட் பாக்ஸ்களை கொடுத்துவிட்டால் போதுமாம் அப்படியே அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறாராம். எந்த வழக்குகளை எந்த மாதிரி பதிவு செய்ய வேண்டும் என்கிற முடிவையும் இவர்தான் காவல் நிலையத்தில் எடுக்கிறாராம். அதனை விட கொடுமை அதிராம்பட்டினம் மீன் மார்க்கெட்டில் கூட இவருடைய கைவரிசையை காட்டுகிறாராம். மேலதிகாரிக்கு மீன் வேண்டும், நண்டு வேண்டும், இறால் வேண்டுமென அங்கு வணிகம் செய்யும் வியாபாரிகளை கூட தினமும் தொந்தரவு செய்கிறாராம். அதே போல் மணல் கடத்தும் மாட்டு வண்டிகளை மடக்கி மேலதிகாரிகளுக்கு ரோலிங் சேர் வாங்க வேண்டும் என தலா 2500 ஒவ்வொருவரிடம் வசூலித்து வருகிறார் அவர் வசூலித்தற்கான ஆதாரமும் எங்களிடம் இருக்கிறது.
டாஸ்மாக்கில் தினமும் இவருக்கு என்று ஒரு பாட்டிலை இரவு கடையில் பணிபுரிபவர்கள் கொடுக்க வேண்டுமா இல்லை எனறால் அவர்களை மிரட்டி பல்வேறு சர்ச்சைகளில் சிக்க வத்து விடுவாராம் இந்த ராமராஜன். காவல் ஆய்வாளர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகிறாராம். இன்னும் பல்வேறு முறைகேடுகளை செய்து பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறாராம். இவரை இப் பதவியில் இருந்து மாற்றினால் தான் அதிராம்பட்டினம் காவல்துறை மீது மக்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும் எனவும் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி இவர் மீது நடவடிக்கை எடுப்பார் என்று அப்பகுதியில் பணிபுரியும் வணிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்தி – பாரதி.