Monday, June 8, 2026
No menu items!
HomeUncategorizedதொடர் மிரட்டலுக்குள்ளாகும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மர்மம் விலகுமா ?

தொடர் மிரட்டலுக்குள்ளாகும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மர்மம் விலகுமா ?

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் மின்னஞ்சல்
08.06.2026. காலை nivetha.udhaanidhi@atomicmail.io என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதில் மதியம் 1.10 மணியளவில் வரி வசூலிப்பாளர் அலுவலகத்தில் 17 ஜெலட்டின் குச்சிகளால் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள் வெடிக்கும் என்றும், அங்குள்ள பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்றும் எச்சரிகை விடப்பட்டிருந்தது.

மேலும், குழந்தைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் ஊடகங்களை குறிவைத்து சில சர்ச்சைக்குரிய கருத்துகளும் அந்த மின்னஞ்சலில் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அரியலூர் காவல் துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டவுடன்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மோப்பநாய் மோனா வரவழைக்கப்பட்டு
தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பதை கண்டறிந்தனர். மிரட்டல் மின்னஞ்சல் தொடர்பாக மின்னஞ்சல் அனுப்பப்பட்ட முகவரி மற்றும் அதன் பின்னணி குறித்து சைபர் குற்றப்பிரிவு உதவியுடன் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதுபோன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படுவது ஆறாவது முறை என்றும் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் செயலில் ஈடுபடும் மர்ம ஆசாமி யார் ? என்பதை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

எம்.எஸ்.மதுக்குமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version