தேசிய அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் கோப்பைகளை குவித்த இராவணன் சிலம்பம் அகாடமி. திருச்செந்தூரில் நடைபெற்ற உலக சிலம்பம் தற்காப்பு கலை சங்கம் நடத்திய தேசிய சிலம்ப போட்டியில் பல்வேறு மாவட்டங்கள் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளில் இப்போட்டி நடைபெற்றது. இதில் திருச்சியை சேர்ந்த இராவணன் சிலம்ப அகாடமி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கோப்பைகளை குவித்தனர். இவர்களுடன் இராவணன் சிலம்ப அகாடமியின் சக பயிற்சியாளர்கள்
திரு.வசந்த்குமார், மகாலட்சுமி, சதீஷ்குமார், வருண், சாருமதி, தனலட்சுமி, விக்னேஷ்வரி, ஷர்மி, மதர்ஷா, அறிவழகன் ஆகியோர் உடன் இருந்தனர். இவர்கள் அனைவருக்கும் தேசிய பயிற்சியாளர் இலக்கிய தாசன் பயிற்சி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு திருச்சி பாலக்கரை காவல் ஆய்வாளர் பெரியசாமி அவர்கள் சான்றிதழ் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.