Saturday, July 5, 2025
No menu items!
HomeUncategorizedதிருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 28 வது ஆண்டு விழா...

திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 28 வது ஆண்டு விழா…

திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 28 வது ஆண்டு விழா நடைபெற்றது . ஆண்டு விழா ,கலை விழா, விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா இன்று ஏப்ரல் 5ஆம் தேதி கல்லூரி சீரி பாதுகா அரங்கில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்வின் சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு கே .என்.நேரு அவர்கள் கலந்து கொண்டார் கல்வி, கலை, விளையாட்டு .,ஆகிய மூன்று துறைகளிலும் சிறந்து விளங்கிய 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளையும் கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி திரு கே.என்.நேரு அவர்கள் சிறப்பித்தார் . விழாவில் அமைச்சர் நேரு அவர்கள் சிறப்புரை ஆற்றும் போது மாணவர்கள்” கல்வி மற்றும் பல்துறைகள் சார்ந்த திறமைகளை வளர்த்துக் கொண்டால் அது அடிப்படையில் போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் வெற்றி நிச்சயம் பெற முடியும்,” என்பதை மாணவர்களுக்கு கூறி வாழ்த்துரை நிகழ்த்தினார் . நிகழ்வின் முன்னதாக கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் திரு.C.A.ஆர்.வெங்கடேஷ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.. கல்லூரியின் முதல்வர் முனைவர் M. பிச்சைமணி ஆண்டு அறிக்கையை வாசித்தார். அதனைத் தொடர்ந்து மாணவர் பேரவைத் தலைவர் M. அரவிந்தன் சிறப்புரை நிகழ்த்தினார்.

விழாவின் நிறைவில் மூத்த துணை முதல்வர் முனைவர் ஜி.ஜோதி நன்றியுரை ஆற்றினார. மற்றும் துணை முதல்வர்கள், மற்றும் புல முதன்மை யானவர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மக்கள் தொடர்பு அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் C.A .வெங்கடேஷ் அவர்கள் பத்திரிக்கை யாளர்களின் சந்திப்பில் ஆண்டவர் கல்லூரிக்கு அமைச்சராக, இருந்தாலும், சட்டமன்ற உறுப்பினராக கே.என். நேரு அவர்கள் பணியாற்றினாலும் எங்கள் கல்லூரிக்கு தொடர்ந்து பல உதவிகளை செய்து , கிராம புற மாணவ, மாணவர்களின் கல்வித்தரம் உயர பல வழிகளில் உதவி செய்ததாகவும் கூறினார். தாங்கள் கல்லூரியில் பணிபுரியும், அனைத்து கல்வி பேரசிரியர்கள். , நிர்வாகிகள் அனைவரும் , மிகவும் ஈடுபாட்டுடன் பணிபுரிவதாக பெருமிதத்துடனும், தெருவித்து அனைவருக்கும் நன்றியை கூறினார்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version