Wednesday, November 5, 2025
No menu items!
HomeUncategorizedதிருச்சி தேவர் ஹால் … 21வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.

திருச்சி தேவர் ஹால் … 21வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.

பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது‌.

திமுக அரசின் சேவைகளை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்திட முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினின்
உங்களுடன்_ஸ்டாலின் திட்ட முகாம், திருச்சி கிழக்குத் தொகுதி மாநகராட்சி மண்டலம் ஒன்றிற்கு உட்பட்ட வார்டு எண் 21 மேலபுலிவார் சாலையில் அமைந்துள்ள தேவர் மஹாலில், நடைபெற்றது‌.

நத்தர்ஷா பள்ளிவாசல், ஜீவா நகர், வள்ளுவர் நகர், கல்யாணசுந்தரம் நகர், பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெற்றது.

அதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து உடனே தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான ஆணைகளைப் பயனாளிகளிடம் வழங்கினார்.

         சொத்து வரி .பெயர் மாற்றம் உத்தரவு ,புதிய சொத்து வரி விதிப்பு உத்தரவு, பட்டா உத்தரவு 

ஆகியவை இந்நிகழ்வில் வழங்கப்பட்டது‌‌ .

மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து
பெறப்படும் மனுக்கள் குறித்தும் அதற்கு தீர்வு காண்பது குறித்தும் கேட்டறிந்தார்.
முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிகழ்வில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மாநகர செயலாளர் மண்டல குழு தலைவர் மு.மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி கிழக்கு தாசில்தார் விக்னேஷ், பகுதி கழகச் செயலாளர்கள் மோகன், வார்டு எண் 21 மாமன்ற உறுப்பினர் மும்தாஜ் பேகம் வட்ட கழகச் செயலாளர்கள் தர்கா முபாரக், ராஜா, மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்‌.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version