திருச்சி மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசலால் சாலை விபத்துக்கள் அதிகரிப்பதை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை சீரமைக்க
மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும்,
போர்க்கால அடிப்படையில்
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் புதனன்று மத்திய பேருந்து நிலையம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் கோவி. வெற்றிச்செல்வம் தலைமை தாங்கினார். போராட்டத்தை மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார்.
போராட்டத்தை விளக்கி
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரெங்கராஜன், ரேணுகா, லெனின், கார்த்திகேயன், சந்தானம், மூத்த தோழர் சம்பத் ஆகியோர் பேசினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி திருச்சி மண்டல செயலாளர் பிரபாகரன், மேற்கு மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
உண்ணா விரதத்தை மத்தியக்குழு உறுப்பினர் பாலபாரதி முடித்து வைத்தார். போராட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாலக்கரை பகுதி செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.
