பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வயலப்பாடி பகுதியில் “சிங்க பெண்ணே எழுந்து வா ” என்ற தலைப்பில் மகளிர் உரிமை மீட்பு பயணம் நிகழ்வில் பசுமை தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணி கலந்து கொண்டு பேசியது .

திமுக அரசு பெரிய திட்டங்களை அறிவித்து விட்டு அவற்றை செயல்படுத்தாமல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் விளையும் மக்காச்சோளம், பருத்தி, சின்னவெங்காயம் உள்ளிட்ட விவசாய பொருட்களுக்கு சேமித்து வைக்க கிடங்கு வசதிகளை ஏற்படுத்தி தராமல் டாஸ்மார்க் மதுபானங்களுக்கு மட்டுமே கிடங்குகளை அமைத்துள்ளனர். திமுக அரசு கொண்டுவந்துள்ள திட்டங்கள் அனைத்துமே கிடப்பில் போடப்படும் திட்டங்கள் மட்டும் தான். மேலும் சிறப்பு பொருளாதார மண்டலம். மருத்துவக் கல்லூரி போன்ற பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை அறிவித்துவிட்டு அதனை நடைமுறைப்படுத்தாமல் பெரம்பலூர் மாவட்ட மக்களை திமுக அரசு வஞ்சித்து விட்டது. என்றவர் தொடர்ந்து
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்துள்ளது. மக்களின் வரிப்பணத்தில் இருந்து மூவாயிரத்தை கொடுத்துவிட்டு அதனை மீண்டும் டாஸ்மாக் கடை மூலம் திரும்ப பெறுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இப்படி ஏழை , எளிய மக்களை வஞ்சித்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்காமல் பொய் வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்துவிட்டு பொது மக்களை ஓட்டு போடும் மெஷின்களாக நடத்தி வருகின்றனர் டாஸ்மாக்கை ஒழித்திட ஏழை எளிய விவசாயிகளின் வாழ்வாதாரம் செழித்திட அன்புமணி பக்கம் நீங்கள் அனைவரும் நிற்க வேண்டும் என்று கூறினார்.
ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்ட இந்நிகழ்சியில் ஒவ்வொரு மகளிரோடும் தனித்தனியே புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக காரைப்பாடி கிராமத்தில் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டநிதியில் கட்டப்பட்ட பல்நோக்கு மையகட்டிடத்தை திறந்து வைக்க சென்றவருக்கு அக்கிராம மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பூத்தூவி வரவேற்றதோடு குடிக்க சொம்பில் தண்ணீர் கொடுத்து உபசரித்தது தமிழர் பண்பாட்டின் அடையாளத்தை காட்டி சுவாராஸ்யத்தை ஏற்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் பாமக மாவட்ட செயலாளர் செந்தில்குமார் , பாமக இணை பொதுச் செயலாளர் வைத்தி உழவர் பேர் இயக்க தலைவர் ஆலயமணி உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அமைப்பு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
எம்.எஸ்.மதுக்குமார்.
