Thursday, October 9, 2025
No menu items!
HomeUncategorizedதிருச்சியில் முதுகலைஆசிரியர்கள் தேர்வுக்கு கால அவகாசம் வேண்டி அரசுக்கு கோரிக்கையும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பும்...

திருச்சியில் முதுகலைஆசிரியர்கள் தேர்வுக்கு கால அவகாசம் வேண்டி அரசுக்கு கோரிக்கையும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பும்…

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டு 12.10.25 அன்று முதுகலை ஆசிரியர் தேர்வு நடைபெறப்போவதாக அரசு அறிவித்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சி பொறுப்பற்ற பிறகு முதன்முறையாக இந்த முதுகலை ஆசிரியர் தேர்வு நடைபெற உள்ளது . இதற்கான புதிய பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு மேலும் பொது அறிவு உளவியல் போன்றவர்களுக்கு மிக ஆழமாகவும் பறந்து விரிந்த பாடத்திட்டமும் தரப்பட்டுள்ளது. ஆகவே குப்பை அனைத்தையும் படித்து தேர்வு எழுத ஆசிரியர்களுக்கு தகுதிய கால அவகாசம் இல்லை எனவும், கால அவகாசம் இல்லாததால் மேற்கண்ட தேர்வை சரியாக எழுத முடியாத சூழ்நிலை யில்உள்ளதாகவும் , தேர்வு எழுத இருக்கும் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலிலும் தற்கொலை செய்யக் கூடிய அளவுக்கு மன நிலையில் உள்ளதாகவும் அச்சத்துடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இது சம்பந்தமாக அரசு மற்றும் கல்வி அதிகாரிகளை பலமுறை அணுகி கோரிக்கையாக தெரிவித்த போதும் இவர்களுக்கு அரசாலும் அரசு அதிகாரிகளாலும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை என்று மிகவும் வேதனையுடன் தெரிவித்தனர். தேர்வு சம்பந்தமாக சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடர்ந்து உள்ளதாக தெரிவித்தனர் . மேலும் இவர்கள் நியாயமான கோரிக்கையை பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற அரசியல் கட்சித் தலைவர்களும் இவர்களுக்காக குரல் கொடுத்துள்ளதாக தெரிவித்தனர் . எனவே எனவே தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும் தமிழக முதல்வரும் இவர்கள் அத்தனை மீது தனிக் கவனம் செலுத்தி தேர்வை எதிர்நோக்கி காத்திருக்கும் 2 லட்சம் ஆசிரியர்கள் நலன் கருதி , தேர்வு எழுத இரண்டு மாத கால அவகாசம் வழங்கிட வேண்டும் என்றும் அனைவரும் கோரிக்கையாக பத்திரிகையாளர்களிடம் செய்தியாக தெரிவித்தனர் . செவிமடுக்கு மா தமிழக அரசு ? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version