தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள பெரியகோட்டை கோபாலசமுத்திரம் பகுதி சார்ந்தவர் வினோத் குமார் டிரைவராக வேலை பார்க்கும் இவர் தனது மனைவி நித்தியாவுடன் நிம்மதியாக குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் தன் மனைவி ஆசையாக ஆண்ட்ராய்டு போன் கேட்டதால் அதனை தான் உழைத்த சம்பளத்தில் வாங்கி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ஆண்ட்ராய்டு போனில் மூழ்கி போன நித்யா திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ஒருவருடன் சமூக வலைத்தளத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது,
நிலைமை கைமீறி சென்றதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நித்யா கள்ளக்காதலுடன் வீட்டை விட்டு கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு ஓடி விட்டார். கணவர் வினோத் குமார் மனைவி பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை இதில் மனமடைந்து போன கணவர் வினோத்குமார் வேறு வழியின்றி தன்னுடைய மூன்று குழந்தைகளை ஓவியா,(12) கீர்த்தி(8) என்கிற இரண்டு பெண் குழந்தை ஈஸ்வரன்(5) என்கிற ஆண் குழந்தையையும் கத்தியை வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அவரே நேரடியாக சென்று மதுக்கூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
குழந்தைகளை கொலை செய்வதற்கு முன்பு குழந்தைகள் கேட்டு அனைத்து தின்பண்டங்களையும் வாங்கிக் கொடுத்துள்ளார் குழந்தைகள் அதனை தின்ற பிறகு தான் கழுத்தை எடுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார் .தன் பெற்ற குழந்தைகளை கொள்வதற்கு எப்படி இது போன்ற அரக்கர்களுக்கு மனம் வருகிறது என்று தெரியவில்லை என புலம்பி தவித்தனர் அப்பகுதி மக்கள்.
செய்தி – கார்த்திக்.
