உலர் சாம்பல் செங்கல் விற்பனைக்கான ஜிஎஸ்டி வரியை ஐந்து சதவீதமாக குறைத்திட பிரதமர் அவர்களுக்கு தமிழ்நாடு உள்ள சாம்பல் செங்கல் மற்றும் கட்டிகள் தயாரிப்பாளர் சங்கத்தின் மூலமாக கோரிக்கை வைக்கப்பட்டது உலர் சாம்பல் செங்கல் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை தமிழகம் முழுவதும் ஏறக்குறைய 1500க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் , ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களும் வேலை செய்து வருகின்றனர் அதேபோல இந்தியா முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களும் , பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலை செய்து வருகின்றனர் . நமது நாட்டில் வீடு கட்டி வரும் பொது மக்களுக்கு தேவைப்படும் கட்டுமான பொருட்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது உலர் சாம்பல் செங்கல் ஆகும். இந்த செங்கல் தயாரிப்பிற்கு 2017ஆம் ஆண்டில் ‘, ஐந்து சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரி 2021 ஆம் ஆண்டில் 12 சதவீதமாக உயர்த்தப்பட்டது . தற்போது ஒன்றிய ஆட்சியில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் மிகவும் வலிச்சுமை குறைந்து இருப்பது பொது மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது. ஆனால் உலர் சாம்பல் செங்கல் விற்பனைக்கான ஜிஎஸ்டி வரி மட்டும் , 12% சதவீதமாக உள்ளது. இதனை ஒன்றிய அரசு கணக்கில் கொண்டு ஜிஎஸ்டி வரியை 5%. சதவீதமாக குறைக்க வேண்டும் என தமிழ்நாடு பிரிக்ஸ் அண்ட் பிளாக்ஸ் தயாரிப்பு நிறுவனங்களின் அசோசியன் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது .