Tuesday, December 2, 2025
No menu items!
HomeUncategorizedதிருச்சியில் மாவட்ட ஆட்சியரகத்தில் தோட்டக்கலை அலுவலர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்……….

திருச்சியில் மாவட்ட ஆட்சியரகத்தில் தோட்டக்கலை அலுவலர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்……….

திருச்சியில் தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நல சங்கம் மற்றும் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் நல சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நல சங்கம் மற்றும் தமிழ்நாடு உதவி அலுவலக சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் தனசேகர் தலைமை வகித்தார். இதில் உழவர் பெருமக்களின் அதிக வருமானத்தை ஈட்டி தரக்கூடிய தோட்டக்கலை வளர்ச்சியை பாதிக்கக்கூடிய திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும். தோட்டக்கலை பட்டயம் மற்றும் பட்டதாரிகளின் எதிர்கால வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய திட்டத்தை கைவிட வேண்டும். வேளாண் விஞ்ஞானிகளைக் கொண்டு குழு அமைத்து அதன் பரிந்துரையில் செயல்படாத திட்டத்தை கைவிட வேண்டும் தோட்டத்துறை கள அலுவலர்களை அவசர காலத்தில் பணியிட மாறுதலை உடனே நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் திருச்சியில் உள்ள தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

பேட்டி. தனசேகர் . தோட்டக்கலை உதவிய இயக்குனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version