திருச்சி மலைக்கோட்டை போக்குவரத்து பணிமனையில் இருந்து அரசு பஸ் சத்திரம்பேருந்து நிலையத்துக்கு புறப்பட்டது. கோகினூர் தியேட்டர் சிக்னல் அருகே வரும்போது ஒரு தனியார் டவுன் பஸ் வேகமாக அரசு பஸ்சை முந்த முயன்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அரசு பஸ் கண்டக்டர் செந்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் வகையில் பஸ்சை ஓட்டிய தனியார் பஸ் டிரைவர் தினகரனை திட்டி உள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில் தனியார் பஸ் டிரைவர் தினகரன் பஸ்சை சுத்தப்படுத்தும் பிரஷ் கட்டையால் அரசு பஸ் கண்டக்டர் செந்திலை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் செந்திலுக்கு மண்டை பிளந்து ரத்தம் கொட்டியது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் செந்திலை மீட்டு அரசு ஆஸ்பத்திரி சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பம் குறித்து உறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.