Sunday, December 22, 2024
No menu items!
HomeUncategorizedதமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முன்னெடுப்பில் 8 கிலோமீட்டர் ஆரோக்கிய நடைப்பயிற்சியை நடத்திய அன்னை...

தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முன்னெடுப்பில் 8 கிலோமீட்டர் ஆரோக்கிய நடைப்பயிற்சியை நடத்திய அன்னை சத்யா நடைப்பயிற்சியாளர்கள் சங்கம்.!

தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முன்னெடுத்து நடைபெற்று வரும் மாதந்தோறும் 8 கிலோமீட்டர் ஆரோக்கிய நடைப்பயிற்சியை (Health walk) நடத்திடும் வகையில் , தஞ்சையில்
மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, தஞ்சை மாநகராட்சி, அன்னை சத்யா நடைபயிற்சியாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய 8 km “ஆரோக்கிய நடைப்பயிற்சி” இன்று நடைபெற்றது…

இன்று காலை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சியாளர்களுக்கு பிரத்தியேக இரத்த பரிசோதனை, இரத்த அழுத்தம் உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட்டு அதனை தொடர்ந்து ,மாநகர் நல அலுவலர் டாக்டர் . நமச்சிவாயம், நடைபயிற்சியாளர்கள் சங்க தலைவர் சீனிவாசன், கௌரவ தலைவர் து.செல்வம், செயலாளர் ஜெயக்குமார் முன்னிலையிலையில் நடைபயிற்சியை மாவட்ட சுகாதார அலுவலர் கலைவாணி துவக்கிவைத்தார்.

விளம்பரம்:-


ஏராளமானோர் பங்கேற்ற நடைபயிற்சி குந்தவை நாச்சியார் கல்லூரி வழியாக புதிய பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் அதே வழியாக சத்யா விளையாட்டு திடலை வந்தடைந்து 8 கிலோமீட்டர் தூரத்தை நிறைவு செய்தது…
இதில் ஏராளமான பெண்கள், இளைஞர்கள், 60 வயதை கடந்தவர்கள் பங்கேற்றனர்.. மாதந்தோறும் இதே போல் நடைபயிற்சி நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version