Wednesday, June 10, 2026
No menu items!
HomeUncategorizedகோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள்

கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள்

தலைமைச் செயலகத்திற்கு வரும் முதல்வர் விஜய்யின் ஷெட்யூல் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் அவர் காலை 10 மணிக்கு வந்து மாலை 5 மணிக்கு வீட்டிற்கு செல்கிறார், இவரை போல் யாரேனும் முதல்வர்கள் இருந்திருக்கிறார்களா என தவெக அமைச்சர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழக அரசியல் களம் எப்போதும் பரபரப்பிற்குப் பஞ்சமில்லாதது. ஆனால், இப்போது தலைமைச் செயலகமான கோட்டை வட்டாரத்தில் கிளம்பியிருக்கும் பேச்சு, கோப்புகளின் நகர்வு பற்றியது அல்ல; முதல்வர் விஜய்யின் ‘பஞ்ச்’சுவாலிட்டி மற்றும் அவரது வேலை பார்க்கும் வேகம் பற்றியதுதான். பொதுவாகவே அரசியல் தலைவர்களின் வருகை என்பது நேரத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்பது ஒரு எழுதப்படாத விதி. ஆனால், முதல்வர் விஜய் அதனை உடைத்தெறிந்துள்ளார். காலை 10 மணி அடித்தால் போதும், முதல்வரின் கார் தலைமைச் செயலகத்தின் வாசலில் வந்து நிற்கிறது. சரியாக 10 மணிக்குத் தனது இருக்கையில் அமர்ந்துவிடும் அவர், மாலை 5 மணி வரை இடைவிடாது மக்கள் பணிகளில் மூழ்கிவிடுகிறார். இதில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த விஷயம் என்னவென்றால், அவரது மதிய உணவு இடைவேளைதான். பல மணி நேரம் மதிய உணவிற்காகச் செலவிடும் வழக்கமான நடைமுறையை மாற்றி, வெறும் 30 நிமிடங்களில் தனது மதிய உணவை முடித்துக் கொள்கிறார். அதுவும் வெளியில் எங்கும் செல்லாமல், அலுவலகத்திலேயே எளிமையாகச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் கோப்புகளைப் பார்க்கத் தொடங்கிவிடுகிறார். முதல்வரின் இந்த அதிரடி மாற்றத்தைக் கண்டு அமைச்சர்களே வாயடைத்துப் போயுள்ளனர். இது குறித்து அமைச்சர்கள் அருண்ராஜ் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் தங்களுக்குள் ஆச்சரியத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். “நாங்கள் பல முதல்வர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் சி.இ.ஓ போல, இவ்வளவு துல்லியமாக நேரத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு முதல்வரை இப்போதுதான் பார்க்கிறோம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் உழைப்பது சாதாரண விஷயம் அல்ல. இதற்கு முன்பு எந்த முதல்வராவது இப்படி செயல்பட்டு இருக்கிறார்களா?” என அவர்கள் வியப்புடன் கேள்வி எழுப்பியுள்ளனர். முதல்வரின் இந்த ‘ஷார்ப்’ டைமிங், அரசு அதிகாரிகளையும் சுறுசுறுப்பாக்கியுள்ளது. முதல்வர் இவ்வளவு சீக்கிரம் அலுவலகம் வரும்போது, நாமும் நேரத்திற்கு வர வேண்டும் என்ற கட்டாயம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தலைமைச் செயலகமே ஒரு புதிய உத்வேகத்துடன் இயங்கத் தொடங்கியுள்ளது. “நேரம் என்பது மக்களுக்குச் சொந்தமானது, அதை வீணடிக்கக் கூடாது” என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. இந்த ‘புதிய கலாச்சாரம்’ தமிழக அரசியலில் ஒரு ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், கோட்டை இப்போது ஒரு புதிய வேகத்தில் பயணிக்கத் தொடங்கியுள்ளது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version