கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக சி. தினேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 2017-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான திரு. தினேஷ் குமார் இதுவரை தூத்துக்குடி ஆணையர், சிவகாசியில் துணை ஆட்சியராக பணியாற்றி உள்ளார். பதவி உயர்வு பெற்ற பிறகு, திண்டுக்கல்லில் கூடுதல் ஆட்சியராக (வளர்ச்சி) நியமிக்கப்பட்டார். மதுரை மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வரும் நிலையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு உள்ளார். அனைத்து துறைகளையும் கவனத்தில் கொண்டு சிறப்பாக செயல்பட்ட கே.எம். சரயு, ஐஏஎஸ், அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, அரசு (நெறிமுறை), பொதுத்துறை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
M. நந்தகுமார்
செய்தியாளர் கிருஷ்ணகிரி