Sunday, October 19, 2025
No menu items!
HomeUncategorizedஅரியலூர் மாவட்டத்தில் காணாமல் போன சுமார் 16 இலட்சம் மதிப்பிலான மொபைல் போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளரிடம்...

அரியலூர் மாவட்டத்தில் காணாமல் போன சுமார் 16 இலட்சம் மதிப்பிலான மொபைல் போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

இணைய குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் சந்தீப் மிட்டல் வழிகாட்டுதலில் திருச்சி மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் அறிவுறுத்தல்படி
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின் பேரில் அரியலூர் மாவட்டத்தில் காணாமல் போன மொபைல் போன்களை CEIR PORTAL- உதவியுடன் கண்டுபிடிக்கும் பணி தொடங்கியது.

இதனையடுத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், CEIR PORTAL உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் ரூபாய் 16 இலட்சம் மதிப்பிலான 153 மொபைல் போன்களை, அக்டோபர் 18. ந்தேதி
மாவட்ட காவல் அலுவலகம் கொண்டுவரப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

மேலும் பொதுமக்கள் செல்போன் தொலைந்து விட்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும். இணைய குற்றங்கள் க குறித்த புகார்களை இலவச உதவி எண் 1930 அழைக்கவும்,www.cybercrime.com.gov.in என்ற இணையத்தில் பதிவிடவும் அரியலூர் மாவட்ட இணைய குற்ற காவல் நிலையம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிகழ்ச்சியில் .இரா.முத்தமிழ் செல்வன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்), துணைக் காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் (மாவட்ட குற்ற பதிவேடு கூடம்) காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.

எம்.எஸ்.மதுக்குமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version