அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சாலையில் தலைக்கவசம் அணியாமலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், மற்றும் வீலிங் செய்தும் சில இளைஞர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இச்சம்பவம் பொதுமக்களிடையே பயத்தையும் அதிருப்தியையும் உண்டாக்க இதுகுறித்து ஆண்டிமடம் காவல் நிலையத்தார் விசாரணையில்இறங்கினர் . விசாரணையில் பொதுமக்களை அச்சுறுத்தி பைக் சாகசம் நிகழ்த்திய இளைஞர்கள் மீது ஆண்டிமடம் காவல் உதவி ஆய்வாளர் நந்தகுமார்
வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டார்.
இனி வருங்காலங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று இளைஞர்கள் உறுதி அளித்தனர்.
மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கினால், வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.்இது போன்ற நடவடிக்கை அரியலூர் மாவட்டம் முழுவதும் தொடர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
எம்.எஸ்.மதுக்குமார்.