தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை ரயிலடி பீர்பகாவுதீன் தெருவில் வசித்து வருபவர் பைசல். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது பழைய வீட்டை இடிக்கும் பணியில் தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டு வந்தனர். அவர்களுடன் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி அண்ணாநகரை சேர்ந்த குணசேகரன் மகன் மணிகண்டன் (27) என்பவரும், அய்யம்பேட்டை இரட்டை தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் குமார் (20) என்பவரும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் வீடு இடித்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக சுவர் விழுந்து இடுப்பாடுகளில் இரண்டு வாலிபர்களும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த பாபநாசம் தீயணைப்புத் துறையினர் பொதுமக்களின் உதவியுடன் இருவரது உடல்களையும் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விளம்பரம்:-