மணல், கிராவல், சவுடுமண், என்றாலே புதுக்கோட்டை எஸ். ராமச்சந்திரன் ( S.R.) தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும்.
அந்த நினைவை கனவாக்கி உள்ளே நுழைந்து இருக்கிறார் மயிலாடுதுறையைச் சார்ந்த ராஜப்பா என்கிற நபர்.

கடந்த வாரம் கிராவல் மற்றும் சவடுமண் அனைத்தும் ராஜப்பா வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது அவர்தான் இனி தமிழ்நாடு முழுவதும் இந்த பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள போகிறார் என்று நாம் செய்திகள் வெளியிட்டிருந்தோம். அதன் அடிப்படையில் பிசினஸை தொடங்குவதற்கு முன்பாக கிடா வெட்டி பூஜை போட்டு பணியை துவங்க ஆரம்பித்திருக்கிறார் ராஜப்பா. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக மணல் மாஃபியாக்கள் எப்படியாவது கிராவல் மற்றும் சவுடு மண் ஆகியவற்றை நாம் எடுத்து விட வேண்டும் என ராஜப்பாவை நோக்கி பல கோடிகளை கையில் வைத்துக்கொண்டு அவரை நோக்கி வலம் வருகின்றனர்.
ஆனா ராஜப்பா தரப்போ சில்லரை எல்லாம் பத்தாது மாவட்டத்திற்கு ஏற்ப ஒரு மாவட்டத்திற்கு 3 கோடி, 5 கோடி, 10 கோடி என ஏலம் விடுவது போல் அறிவித்துள்ளனர்.
எத்தனை கோடி கொடுத்தாலும் சரி நாம் எப்படியாவது கிராவல் குவாரிகளை ஏலம் எடுத்து விட வேண்டும் என வண்டியில் பணக் கட்டுகளோடு வலம் வருகின்றனர் மணல் மாஃபியாக்கள்.
இதிலும் தெளிவான சிலர் இன்னும் சில மாதங்கள் இருக்கும்போது பல கோடிகளை இவர் கைகளில் கொடுத்தால் நமக்கு என்ன கிடைக்கும் என்றும் புலம்பி வருகின்றனர்.
பொறுத்திருந்து பார்ப்போம்.
யார் யார் சிக்குகிறார்கள் என்று.?
சென்னை செய்தியாளர்- ராஜா.