தஞ்சை ஏழுப்பட்டி அருகே காலையில் நடந்த கொலை தஞ்சையை இன்று பரபரப்பாக வைத்துள்ளது.
கொலை செய்யப்பட்ட குறுந்தையன் ஏற்கனவே இரண்டு கொலைகளை செய்தவர் என்பது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. 2013 ஆம் ஆண்டு உலகநாதன் என்பவரையும் 2014 ஆம் ஆண்டு உதயா என்பவரையும் இவர் கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் இவரோட சமூகத்தை சேர்ந்த ஒத்த கை ராஜா என்பவர் இவரும் பல்வேறு வழக்குகளில் தொடர்புள்ளவர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட இவருக்கும் ஓத்த கை ராஜாவிற்கும் அடிக்கடி மோதல் போக்கு நடந்து வந்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே கூட்டாளிகளாக பழகி வந்த இருவரை கொலை செய்த குறுந்தையன் தன்னையும் ஏதாவது செய்து விடுவார் என்ற நோக்கத்தில் ஒத்தகை ராஜா உள்ளிட்ட ஆறு பேர் இன்று காலை டீக்கடையில் டீ குடித்துவிட்டு வந்த குறுந்தையன் மீது காரை மோதி கீழே விழுந்த குறுந்தையனை வெட்டி படுகொலை செய்துள்ளனர். குற்றவாளிகளில் வடிவேலு என்கிற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளதுனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
செய்தி – எம்.விஜய்.