Sunday, June 14, 2026
No menu items!
Google search engine
HomeUncategorizedநூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தியஇலையூர் செல்லியம்மன் ஆலய திருவிழா.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தியஇலையூர் செல்லியம்மன் ஆலய திருவிழா.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தில் அமைந்துள்ள செல்லியம்மன் ஆலய வைகாசி மாதம் அமாவாசை முன்னிட்டு, 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினார்கள். மாலை அணிந்து கடும் விரதம் இருந்த பக்தர்கள், தாங்கள் வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடன்களை செலுத்தும் வகையில் பால்குடம் எடுத்தல், சக்திகரகம் சுமத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர். கிராமத்தில் உள்ள ஏரிக்கரையிலிருந்து தொடங்கிய ஊர்வலம்,

முக்கிய வீதிகள் வழியாக பம்பை மற்றும் மேள முழக்கங்களுடன் நடைபெற்றது. இதில் அம்மன், காளியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட தெய்வ வேடங்களில் பக்தர்கள் அலங்கரித்து, “ஓம் சக்தி பராசக்தி” என பக்தி முழக்கமிட்டு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
மேலும், மாரியம்மன் மற்றும் செல்லியம்மன் சுவாமிகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

எம்.எஸ்.மதுக்குமார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments