தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் தாலுகா அலுவலகத்தில் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சராசரி நாள் ஒன்றுக்கு சுமார் 500க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு அத்தியாவசிய தேவையான பல்வேறு சான்றிதழ்கள் பெற குறிப்பாக பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு அரசு சேவைகள் பெற மேலும் தற்போது தமிழக அரசு விவசாயிகளுக்காக அறிவித்துள்ள வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி ஆணை பெறுவதற்கு விவசாயிகளிடம் 10000 ஆயிரம் முதல் பெருமளவில் தஞ்சாவூர் மாவட்டத்திலேயே திருவோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெருமளவில் லஞ்சம் வாங்குவதாக கூறப்படுகிறது தகவலின் அடிப்படையில் தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி அன்பரசன், தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள், பத்மாவதி, சரவணன், மற்றும் போலீசார் நேற்று மாலை திடீரென திருவோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வருவதை கண்டு வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து அருகில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் இரண்டு கை பேக்குகள் வைத்ததை கண்டுபிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த பெட்டி கடைக்கு விரைந்து சென்று 2 கை பைகளையும் கைப்பற்றினர் அப்போது அந்த கை பைகளில் பணம் இருந்ததாக கூறப்படுகிறது பிறகு சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரை தாசில்தார் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர் இந்த சோதனையின் போது கணக்கில் வராத 5 ஆயிரம் பணத்தையும் சில ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது லஞ்ச ஒழிப்பு போலீசார் திருவோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு நடத்தியதால் அதிகாரிகள் மத்தியில் பதட்டமும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது,
செய்தியாளர்:- பழனிவேல் கிருஷ்ணன்

