அரியலூர் மாவட்டம் செந்துறையைச் சேர்ந்த ராமர் லெஷ்மி தம்பதியின் மகள் சித்ரா பட்டுக்கோட்டையில் உள்ள விவசாயக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் நிலையில் இன்று விடுமுறைக்காக வீடு திரும்பியவர் அரிலூரிலிருந்து தனது
தந்தை மற்றும் உறவினருடன் இருசக்கர வாகனத்தில் செந்துறை நோக்கி வந்து கொண்டிருந்தார், அப்போது அரியலூர் அமீனாபாத் அருகே தனியார் சிமெண்ட் ஆலைக்கு அதிவேகமாய் சென்ற டிப்பர் லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் மாணவி சித்ரா சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார் பெற்ற பிள்ளையை மடியில் போட்டு தந்தை கதறியது கல்நெஞ்சையும் கலங்கடித்தது . அரியலூர் மாவட்டத்தில் சாலை விபத்து என்பது குறிப்பாக சுண்ணாம்புகல் சுரங்கங்களுக்கு செல்லும் கனரக வாகனங்களால் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் சிலர் கருத்து தெரிவிக்கையில் பொது சாலையில் சுண்ணாம்புகல் லாரிகள் அனுமதிக்ககூடாது அவர்களுக்கு தனிபாதை அமைத்து கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும் , சமூக ஆர்வலர்களும் வலியுருத்திவந்தபோதும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை மேலும் ஆலையிலிருந்து சுண்ணாம்புகல் சுரங்கம் செல்லும் சாலை வரை கண்காணிப்பு கேமரா பொருத்தி காவல்துறை மூலம் அதிவேகமாக இயக்கி பொதுமக்களை அச்சுறுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்யவேண்டும். நடைக்கு சம்பளம் என நடைமுறை இருந்தால் அதை மாற்றி மாதசம்பளம் அல்லது வார சம்பளம் என நடைமுறைபடுத்தவேண்டும் இதையெல்லாம் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர். படிப்பில் கெட்டியாய் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரியாக ஆயிரம் கனவுகளோடு வலம் வர இருந்த மாணவின் உயிரை குடித்து குடும்பத்தை நிர்கதியாக்கிய சாலை விபத்திற்கு பொறுப்பேற்க போவது யார் ?
எம்.எஸ்.மதுக்குமார்.

