Wednesday, July 30, 2025
No menu items!
HomeUncategorizedதிருச்சி மாவட்ட தென்னிந்திய யாதவ மகாசபை நடத்திய அழகுமுத்துக்கோனின் 268 வது குருபூஜை விழா .

திருச்சி மாவட்ட தென்னிந்திய யாதவ மகாசபை நடத்திய அழகுமுத்துக்கோனின் 268 வது குருபூஜை விழா .

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 268 வது குருபூஜை விழா திருச்சி மாவட்ட தென்னிந்திய யாதவ மகாசபை சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தென்னிந்திய யாதவ மகாசபை மாநில தலைவர் வழக்கறிஞர் வெங்கடேஷ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார் .

முன்னதாக திருச்சி மாவட்ட செயலாளர் முத்துக்குமார் என்னும் வேலு யாதவ் அனைவரையும் வரவேற்று பேசினார் .

இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன், திமுக தொழிலாளர் நல சங்க மாநில செயலாளர் எம்.ஆர்.மாயழகு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய யாதவ மகாசபை மாவட்ட தலைவர் குணசேகரன் யாதவ், திருவேங்கடம் யாதவ் , சிவாஜி சண்முகம் யாதவ்,
உள்ளிட்டோர் சிறப்பு உரையாற்றினர் .

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமுதாய சொந்தங்கள் ரத்தினகுமார் , கோபிநாத், அல்லூர் சீனிவாசன், கவுன்சிலர் மண்டி சேகர் , நெற்றிக்கண் வால்மீகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

முடிவில் சங்க பொருளாளர் கோபிநாத் அனைவருக்கும் நன்றி கூறி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Recent Comments

Exit mobile version