தஞ்சை சீனிவாசபுரம் அருகே மலேசியா சுந்தரம் என்கிற மிகப்பெரிய நகைக்கடை மற்றும் சிட்பண்ட்ஸ் போன்றவற்றை நடத்தி வந்தவர் ராஜா. இவர் பல ஆண்டுகளாக அப்பகுதியில் நகைக் கடை நடத்தி வந்தார் இந்நிலையில் தொழில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த வாரம் குடும்பத்துடன் வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாக இருந்து வந்தார் அவரால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அவரை தேடி வந்த நிலையில் காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வந்த நிலையில் இன்று மதியம் அருண் என்கிற வழக்கறிஞர் மூலமாக தஞ்சை நகர காவல்துறையிடம் சரண் அடைந்துள்ளார்.. மேலும் காவல்துறையினர் தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி – செந்தில்நாதன்.