தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள நடுவூரை சார்ந்த முத்துக்குமார் என்பவர் தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் என் அனுமதி இல்லாமல் என் இடத்தை அளக்க வந்ததாக காட்டுக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் ஜீவானந்தம் மற்றும் காவாளிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் தமிழரசன் ஆகிய இருவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரில் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் ஏற்கனவே இடப்பிரச்சனை இருக்கிறது. இதனை ஏற்கனவே இருந்த நிர்வாக அதிகாரிகள் சரி செய்யாமல் 70 குழி நிலத்தை மாற்றி உட்பிரிவு செய்து விட்டனர். அதனை சரி செய்யக்கோரி முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் மனு கொடுத்துள்ளேன் அவர்களும் பாராளுமன்ற தேர்தல் முடிந்து சரி செய்து கொள்ளலாம் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால் திடீரென நேற்று இந்த இரண்டு கிராம நிர்வாக அதிகாரிகளும் திடீரென என் நிலத்திற்கு வந்து என் நிலத்தை அளக்க ஆரம்பித்தனர். நான் அளக்கவிடாமல் போய் மறித்ததற்கு என்னை அடித்து கீழே தள்ளி கொன்று விடுவோம் என மிரட்டி சென்றனர். நான் இதனை கண்டித்து தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் புகாரை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். மாவட்ட ஆட்சியருக்கும் இந்த பிரச்சனை தெரியும் அவரிடமும் ஏற்கனவே மனு கொடுத்து இருக்கிறேன். அவரும் இந்த விஷயத்தில் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்.
இது சம்பந்தமாக கேட்க காட்டு குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் ஜீவானந்தத்தை தொடர்பு கொண்டோம் அவர் நம்மிடம் “அவர் வேண்டுமென்றே பொய் சொல்கிறார் அப்படி எதுவும் நடக்கவில்லை நாங்கள் வேறு ஒரு இடத்திற்கு இடத்தை அளப்பதற்கு சென்றோம் அந்த இடத்தில் இவர் தான் எங்களிடம் பிரச்சனை செய்தார் என்றார் .
இது சம்பந்தமாக தஞ்சை தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் அவர்களிடம் கேட்டோம் “நேற்று இரவு புகார் அளித்திருக்கிறார் இன்று அனைவரையும் வரச் சொல்லி பேச இருக்கிறேன் என்று முடித்துக் கொண்டார் காவல் ஆய்வாளர்.
நெருப்பில்லாமல் புகையுமா.?