தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ச.முரசொலி, பா.ஜ.க வேட்பாளர் கருப்பு. எம்.முருகானந்தம் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
கடந்த 20ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று தி.மு.க.வேட்பாளர் ச.முரசொலி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் பிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக வேட்பாளருடன் எம்.பி.பழனிமாணிக்கம், விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட தலைவர்கள் உடன் வந்தனர்.
அதே போல் பா.ஜ.க வேட்பாளர் கருப்பு. எம்.முருகானந்தம் 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து வர திறந்த வாகனத்தில் நின்று ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் பிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஒ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம். அ.ம.மு.க திருவாருர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் உள்பட வேட்பாளருடன் 5 பேர் உடன் வந்தனர்.
இரு கட்சிகளும் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் மோதல் ஏற்படாமல் தடுக்க ஏராளமான காவல் துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர்.