அரியலூர் மையப்பகுதியான சிங்காரத்தெருவில் முறையான வடிகால் வசதியின்றி குடியிருப்புவாசிகள் அவதிபடவதாகவும், இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது. நேற்று இரவு பெய்ய மழைநீர் வடிகால் வசதியில்லாமல் குடியிருப்புக்குள் புகந்ததால் வீட்டிற்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் வேலையால் இரவு முழுவதும் அவதிக்குள்ளாயினர். மேலும் சாக்கடை கலந்த மழைநீரால் சேதமான பொருட்களை மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சிபிஐ பிரமுகர் தண்டபாணி தெரிவித்துள்ளது :
மாவட்ட தலைநகர் அரியலூர் நகரத்தில் மையப்பகுதியாக குறிப்பாக தலித் மக்கள் அதிகமாக குடியிருக்கும் பகுதியான சிங்காரத் தெருவில் (பெயரில் மட்டுமே அழகான சிங்காரத் தெரு) கீழ் – மேல் பொது ரோட்டில் வடபுறம் குடியிருப்புகள் நிறைய உள்ளன. இக் குடியிருப்பு வீதியில் உள்ள வடிக்கால் வாய்க்கால் எல்லாம் மண் சாக்கடையாக தூர்ந்து போய் வருட கணக்கில் கிடக்கிறது. கான்கிரீட் வடிக்கால் – வாய்க்கால் அமைக்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பலமுறை நகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கும், மாவட்ட ஆட்சியர் மற்றும் நகர்புற சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் – தேங்கி கிடக்கும் கழிவுநீர் சாக்கடை புகைப்படம் – வரைபடத்துடன் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு – வஞ்சிக்கப்பட்ட நிலையிலையே சாக்கடை துர்நாற்றம், கொசுக்கடி இதனிடையேதான் மக்களின் சொல்லொனா அவஸ்தையுடன் குடியிருந்து வருகிறார்கள். சீரழிந்து கிடக்கும் கழிவுநீர் வடிகால் வாய்க்காலை சீரமைக்கப்பட வேண்டும் என்று 11/ 3/2026 தேதியில் கூட அரசின் சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகளுக்கு பலருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அனுப்பிய கடிதத்திற்கு, முதலமைச்சரின் சிறப்பு பிரிவிலிருந்து நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி நிர்வாகத்திற்கும் கடிதம் அனுப்பிய நகல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அனுப்பியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் நேற்று 19/06/2026 வெள்ளி அன்று இரவு பெய்த தொடர் மழையினால் சிங்கார தெருவில் மழை தண்ணீர் வடிகால் வாய்க்கால் தூர்ந்து போய் கிடக்கும் நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் மாரியம்மன் கோவில் அருகே பால்வாடி பள்ளிக்கு எதிரே மாணிக்கம் சகுந்தலா வீடு மற்றும் தனுசுகொடி வீடு உட்பட பல வீடுகளுக்குள் மழை தண்ணீர் புகுந்து பெரும் பொருள் சேதத்தை ஏற்படுத்தி குடியிருப்பு மக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்கி இருக்கிற வேதனையை, உரிய நகராட்சி நிர்வாகம் துரிதமாக தலையிட்டு உடனடியாக ஜேசிபி எந்திரம் மூலம் வடிக்கால் வாய்க்காலை தூர்வாரி கழிவுநீர் மழைநீர் தேக்கமின்றி சென்றிட நடவடிக்கை எடுப்பதோடு, இனிமேலாவது இப்பகுதியில் கான்கிரீட் வடிகால் வாய்க்கால் கட்டி சீரமைக்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு உயர் மட்ட அதிகாரிகள் தலையிட வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாவட்ட துணைச் செயலாளர் த.தண்டபாணி இமெயில் மூலம் இன்று 20/06/2026) மழைநீர் புகுந்த வீடுகள் அடங்கிய புகைப்படத்துடன் கடிதம் அனுப்பி உள்ளாதகவும் தெரிவித்துள்ளார்.
எம்.எஸ்.மதுக்குமார்.

