தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தி வரும் கவர்னரை கண்டித்து திருச்சி மத்திய ,வடக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் வக்கீல் வைரமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருச்சி மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பரணிகுமார், மாவட்ட துணைச் செயலாளர் கவுன்சிலர் முத்துச்செல்வம்,
முன்னாள் மாவட்ட துணை செயலாளர் குடமுருட்டி சேகர்,
மாணவரணி இன்ஜினியர் ஆனந்த்,
ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்த நல்லூர் கதிர்வேல்,திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, ஆண்டாள் ராம்குமார்,பகுதிச் செயலாளர்கள் மோகன்தாஸ், கவுன்சிலர் நாகராஜன், கமால் முஸ்தபா, காஜாமலை விஜய், ராம்குமார்,மாநகர துணைச் செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ், மத்திய மாவட்ட வர்த்தகர் அணி தொழிலதிபர் ஜான்சன் குமார்,
மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம்,திருச்சி மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது,கவுன்சிலர்கள் மஞ்சுளா பாலசுப்பிரமணியன், ராமதாஸ், புஷ்பராஜ்,
மாவட்ட பிரதிநிதிகள் வழக்கறிஞர் மணிவண்ண பாரதி,சோழன் சம்பத்,
வட்ட செயலாளர்கள் புத்தூர் பவுல்ராஜ் பி.ஆர்.பாலசுப்பிரமணியன் தனசேகர் ,வாமடம் சுரேஷ்,நிர்வாகிகள் டோல்கேட் சுப்பிரமணி,முன்னாள் கவுன்சிலர் திருநாவுக்கரசு, அயூப்கான், அரவானூர் தர்மராஜன், சர்ச்சில்,மின்வாரிய தொழிற்சங்கம் பாஸ்கரன்,பந்தல் ராமு, வண்ணை மோகன், கதிரேசன்,
தென்னூர் அபூர்வா மணி,எம்.ஆர்.எஸ்.குமார், ராஜ்குமார்,மகளிர் அணி கவிதா,மகளிர் தொண்டரணி மதனா உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக ஆளுநரை கண்டித்தும், தமிழ்நாட்டை விட்டு ஆளுநரை வெளியேறு என கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முடிவில் பேரூர் தர்மலிங்கம் நன்றி கூறினார்.
படவரி:
திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் தமிழக ஆளுநரை கண்டித்து மாவட்ட செயலாளர் வக்கீல் வைரமணி தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.அருகில் மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.